விஜய் டிவி ஏற்பாடு செய்த விஜய் அவார்ட்ஸ் விருது வழங்கும் நிகழ்ச்சியில், இயக்குநர் பாலா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத்திடம் அவரின் கோர்ட்டைக் கழற்றுமாறு கோரிக்கை வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் தமிழ் படங்களில், சிறந்த படங்கள், இயக்குநர், நடிகர், என சிறந்த சினிமா கலைஞர்களைத் தேர்வு செய்து விஜய் டிவி ‘விஜய் அவார்ட்ஸ்’ விருது வழங்கி வருகிறது. அந்த வகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி, இந்த ஆண்டு மே மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக, விருது வழங்கும் விழாவை அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தள்ளிவைத்தது. இதையடுத்து, விருது வழங்கும் விழா ஜூன் 3 ஆம் தேதி நடைபெற்றது.

இதில், சிறந்த இயக்குநருக்கான விருதை விக்ரம் வேதா பட இயக்குநர் புஷ்கர் மற்றும் காயத்ரிக்கு இயக்குநர் பாலா வழங்கினார். அப்போது, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கோபிநாத் பாலாவிடம் கேள்வி கேட்க முற்பட்டார்.

(Visited 76 times, 1 visits today)