வட்டுவ பிரதேசத்தில் இராணுவ உயர் அதிகாரியொருவருக்கு சொகுசு வீடொன்றை நிர்மாணிக்கும் பணிகளில் ஈடுப்பட்டிருந்த 12 இராணுவ வீரர்கள்  இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவத்திலிருந்து அண்மையில் ஓய்வுப்பெற்றிருந்த இராணுவ உயர் அதிகாரியொருவரே, இராணுவ செயற்திட்டமென தெரிவித்து குறித்த சொகுசு வீட்டினை நிர்மாணிக்க இராணுவ வீரர்களை பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு ​செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய ​இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும்  இதன்போது கைது செய்யப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் காலை 8 மணியிலிருந்து இரவு 10 மணிவரையில் குறித்த சொகுசு வீட்டு நிர்மாணப் பணிகளில் ஈடுப்பட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 30 times, 1 visits today)