இந்தியாவிற்கு அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜப்பான் நாட்டில் மிகப்பெரிய ரசிகர் வட்டம் உள்ளது. வரும் 7ம் தேதி உலகளவில் வெளிவரும் ’காலா’ படத்தை அந்நாட்டின் ரஜினி ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

ரஜினிகாந்திற்கு ஜப்பானில் டோக்கியோவை தவிர ஒசகா மற்றும் கோப்டூ போன்ற நகரங்களிலும் ரசிகர்கள் மன்றங்கள் உள்ளன. அங்கு செயல்படும் ரசிகர் மன்றங்களுக்கு நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வரும் வெள்ளியன்று வெளிவரும் ’காலா’ படத்தை காண தமிழக ரசிகர்களை விட ஜப்பான் ரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்த்துள்ளனர். தமிழகத்தில் ’காலா’ படத்திற்கான முன்பதிவுகள் மந்தமாக உள்ள நிலையில்இ அங்கோ அது ஆர்பரிப்புடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய டோக்கியோவில் வாழும் ரஜினி ரசிகரான ஹிரோஷி டகடே, ’காலா’ படம் ரஜினி நடிப்பில் முன்னர் வெளியான கபாலி படத்தின் மற்றொரு அவதாரம் என்கிறார்.

ஹிரோஷி டகடேவிற்கு ஜப்பானிய மொழியை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. ரஜினியால் தமிழ் படங்களை பார்க்க ஆரம்பித்த இவர், தற்போது ஆங்கிலத்தை விட தமிழை அழகாக பேசுகிறார்.

’முத்து’ படத்திற்கு பிறகு தான் ரஜினிகாந்த் படங்கள் மீது ஜப்பானியர்களுக்கு மயக்கம் உண்டாகியுள்ளது. இத்தனைக்கும் ’முத்து’ வெளியான போது ரஜினியை விட அப்பட நாயகி மீனா தான் ஜப்பானில் பிரபலமாக இருந்துள்ளார்.

ஆனால் ரஜினியின் படங்கள் தொடர்ந்து வெளிவரவே, இந்தியாவை போல ஜப்பானிலும் ரசிகர்கள் கொண்டாடும் நடிகராகி போனார் ரஜினி. குறிப்பாக ரஜினி என்ற பெயரை குழந்தைகளுக்கு வைக்கும் வழக்கமும் பல ஜப்பானியர்களுக்கு உள்ளது.

2008ம் ஆண்டில் ஹிரோஹி டகடே, இந்தியாவிலிருந்து வரவழகைக்கப்பட்ட ஆட்டோவை தன் வீட்டில் வைத்துள்ளார். ரஜினியின் படங்கள் ஆட்டோ முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் இவர் ’மசாலாவாலா’ என்ற பெயரில் இந்திய உணவுகளை வழங்கும் ஹோட்டல் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார்.

(Visited 28 times, 1 visits today)