கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் படத்தின் புதிய டீசர் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் விக்ரம்-ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள ’சாமி 2’ டீசர் வெளியானது. போலீஸ் உயர் அதிகாரியாக விக்ரம் நடித்துள்ள ’சாமி 2’ டீசர் இணையதளங்களில் டாப் டிரென்டிங்கில் உள்ளது.

இந்நிலையில்  எஸ்கோப் ஆர்டிஸ்ட் பி. மதன் தயாரிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், தயாராகி வரும் ’துருவ நட்சத்திரம்’ படத்தின் புதிய டீசர் இணையதளங்களில் வெளிவந்துள்ளது.

துப்பாக்கி தோட்டக்களின் தெறிக்கும் ஓசையில், அதற்கேற்ற பின்னணி இசையில் செம மாஸாக துருவ நட்சத்திரத்திற்கான ஒலிக்கலவை பணிகள் மிக சிறப்பாக கையாளப்பட்டுள்ளன.

நடிகர்களின் அணிவகுப்பு என இந்த டீசர் அப்ளாஸ் அள்ளுகிறது.

முன்னதாக வெளியான டீசரில் விக்ரம் மற்றும அவரை கைப்பேசியில் துரத்தும் வில்லன் ஆகியோர் மட்டுமே காட்டப்பட்ட நிலையில், தற்போது வெளிவந்துள்ள புதிய டீசரில் விக்ரமுடன் சிம்ரன், ராதிகா, திவ்யதர்ஷினி, பார்த்திபன் உள்ளிட்ட நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.

புலனாய்வு துறை அதிகாரிகளின் பற்றிய கதையாக தயாராகி வரும் துருவ நட்சத்திரம் படத்தில், வில்லன் யார் என்பதை தற்போது வரை படக்கு வெளியிடவில்லை. வில்லனை இன்னும் ’டார்க்மேன்’ என்றே படக்குழு சித்தரித்து வருகிறது.

(Visited 54 times, 1 visits today)