டாக்ட ர் வை. தீபா
யோகா மற்றும் இயற்கை மருத்துவர்

ன்றைய காலகட்டத்தில் நூற்றில் 80 பெண்களுக்கு காலம் தவறிய மாதவிடாய் (Irregular periods) பிரச்சினை இருக்கிறது. நமது கர்ப்பப்பையிலோ அல்லது சினைப்பையிலோ நீர்க்கட்டி (PCOS – Polycystic ovary syndrome), ஓமோனின் சமமற்ற நிலை என்று இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இந்த ஓமோன்களின் சமமற்ற நிலை தான் உடல் எடை அதிகரிப்புக்குக் காரணம். காலப்போக்கில், இதனால் தைரோய்ட் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

இதுபோன்ற ஒழுங்கற்ற மாதவிடாயினால், குழந்தை பெறுவதிலும் சிக்கல் அதிகமாக இருப்பதை பார்க்கிறோம். நம்முடைய உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

நீர்க்கட்டி பிரச்சினை இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகலாம். அதனால், சில பாதிப்புகள் ஏற்படலாம். சரியான அளவில் புரதச் சத்து, இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவினை எடுத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி மற்றும் யோகாவின் மூலமே இந்த ஓமோன் சமமற்ற நிலையினை சரி செய்து, காலம் தவறும் மாதவிடாய் பிரச்சினையை சரிசெய்துவிடலாம்.

மாதவிடாய்க்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இதன் விகிதம் சரியாக இருக்க வேண்டும். மற்றவை பற்றி பேசும் முன்பு ஒரு விடயம். அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஓமோனை ஒழுங்குபடுத்த, ஆளி விதைகள் மற்றும் சோம்பினை சரிவிகிதத்தில் எடுத்து, அதில் சிறிது ஓம நீரினை விட்டு உண்ணலாம்.

ஒரு கரண்டி கருஞ்சீரகத்தை, ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து, தேன் கலந்து குடிக்கலாம். இதில் Anti-inflammatory, Anti-diabetic, ஈஸ்ட்ரோஜன் போன்றவை இருப்பதால், நமது உடலிலும் கர்ப்பப்பையிலும் இருக்கும் அழுக்குகளை நீக்கப் பயன்படுகிறது.

எள்ளுருண்டை சாப்பிடலாம். அதிலும், கருப்பு எள்ளுருண்டை மிகவும் நல்லது. இதில் இருக்கும் நல்ல கொழுப்பு, கல்சியம், மெக்னீஷியம் போன்றவை இரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸை குறைக்கவும் எலும்பை உறுதி செய்யவும் பயன்படும். மேலும், இது உடல் எடையையும் சரி செய்யும்.

கற்றாழையை தேங்காய்ப்பால், பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டால், கொழுப்பின் அளவைக் குறைக்கும். மேலும், கருப்பை அழுத்த அளவையும் சரிசெய்யும்.

ஒரு நெல்லிக்காய் 10 அப்பிள்களுக்குச் சமம். அதில், விட்டமின் சி இருக்கிறது. வெறுமனே இரும்புச்சத்து அதிகமாக இருக்கும் உணவினை எடுத்துக்கொள்வதாலே உடம்பில் இரும்புச் சத்து அதிகமாகிவிடாது. விட்டமின் சி உணவுதான் அதனைக் கொடுக்கும். எனவே, நெல்லிக்கனி அவசியம். நெல்லிக்காயை முதல் நாள் தேனில் ஊறவைத்து, மறுநாள் உண்ணலாம்.

வெந்தயம் சாப்பிடலாம். நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால், ஓமோனை கட்டுப்படுத்த பயன்படும்.
பீரியட்ஸ் சரியாக வரவில்லை என்றால், அவர்களுக்கு அண்ட்ரோஜன் என்கிற ஓமோன் லெவல் அதிகமாக இருக்கும். இதனால், முகத்தில் தேவையில்லாத ரோமங்கள் தோன்றும். சோம்பு மற்றும் ஆளி விதையை எடுத்துக்கொள்வதன் மூலம், அண்ட்ரோஜன் அளவு சரிசெய்யப்பட்டு, இந்த தேவையில்லாத ரோமங்கள் வருவதைத் தவிர்க்கலாம்.

மாதுளைப்பழமே நம் கர்ப்பப்பை வடிவத்தில்தான் இருக்கும். அது, பீரியட்ஸை ஒழுங்குபடுத்த பெரிய அளவில் உதவும். பீட்ரூட் மற்றும் கரட்டை இணைத்து சாப்பிடலாம்.

சிலருக்கு பீரியட்ஸ் மூன்றுநான்கு மாதங்கள் கழித்து வரும் போது, இயல்பிற்கு மீறியதாக ஏழு நாட்களுக்கு மேல் கூட பிரச்சினை இருக்கும். கட்டிகட்டியாக இரத்தப்போக்கு இருக்கும். அவர்கள்,கருஞ்சீரகம் சாப்பிட வேண்டாம். அவர்கள் வாழைப்பூவை வறுத்து தயிருடன் சேர்த்துச் சாப்பிடலாம். பொட்டுக்கடலையை நெய்யுடன் வறுத்து, உலர்ந்த திராட்சையுடன் எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், சீரற்ற மாதவிடாய் இருப்பவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக கருஞ்சீரகத்தை எடுத்துக்கொண்டு வந்தால், அந்தப் பிரச்சினை சரியாகிவிடும்.

அடுத்ததாக, சிலருக்கு மாதவிடாய் சரியாக வரும். ஆனால், சரியானதாக இருக்காது. இதனைத் தவிர்க்க இரும்புச் சத்து அதிகமான உணவைச் சாப்பிட வேண்டும். பேரீச்சை, உலர்ந்த திராட்சை, அத்தி,மாதுளை, கருவேப்பிலை ஜூஸ், அகத்திக்கீரை, சுண்டக்காய் ஆகியவற்றை உண்பதன் மூலம் இதனைச் சரி செய்யலாம்.

இவை தவிர, ஓமோன் சுரப்பினை சரிசெய்யவும், மன அழுத்தத்தினை சரிசெய்யவும், வக்ராசனம், சக்திபந்தாசனம், நாடிசுத்தி ப்ராணயாமா போன்ற சில ஆசனங்கள் இருக்கின்றன. இவற்றை தகுந்த பயிற்சியாளர்களின் ஆலோசனையுடன் செய்யும் போது, மனஅழுத்தம், உடல் எடை, ஓமோன் சமமற்றத் தன்மையை சரி செய்து மாதவிடாய் பிரச்சினையும் எந்தவித பக்கவிளைவும் இல்லாமல், சரி செய்ய முடியும். சரியான உணவையும் உடற்பயிற்சியையும் செய்வதன் மூலம் மாதவிடாய் பிரச்சினையை தீர்க்கலாம்.

(Visited 60 times, 1 visits today)