மனித வாழ்க்கையின் விழுமியங்களை வரலாறாக பதிவு செய்வது இலக்கியமே, இலக்கியங்கள் மூலமாகவே நாகரிகத்தையும் கலாசாரத்தையும் கற்றுக் கொள்கிறோம். இலக்கிய சந்திப்புகள் மற்றும் விவாதங்கள் மூலமாக பரிணா வளர்ச்சியும் பெறுகிறாம்.

உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து இலக்கிய சந்திப்புகளை நிகழ்த்தும் போது அங்கே புதிய உறவுப்பாலமும் ஆரோக்கியமான இலக்கிய விவாதமும் நடைபெற்று தமிழ் இலக்கியத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்பு அமைகிறது.

இவ்வாறான இலக்கிய சந்திப்புகளை இனிய நந்தவனம் குழுமம் பல நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து பல இலக்கிய சந்திப்புகளையும் கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் அண்மையில் மலேசியாவில் கோல சிலாங்கூரில் இனிய நந்தவனம் பதிப்பகம் மலேசியா தமிழ்க் கலை பண்பாட்டு இலக்கியக் கழகம் இணைந்து நடத்திய மலேசியா மற்றும் தமிழக எழுத்தாளர்களின் இலக்கிய சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்க்கலை பண்பாட்டு இலக்கியக் கழகத் தலைவர் குணநாதன் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் மலேசிய சமூக செயற்பாட்டாளர்கள் டத்தோ மனோகரன் முனியாண்டி, செல்வராஜூ பெருமாள், தவத்திரு ஸ்ரீ சுகுந்தன், ஜோசப் அமல்ராஜ் தொழிலதிபர் ஈணூ ராஜன் பத்திரிகையாளர் இராம சரஸ்பதி தமிழகப் படைப்பாளர்கள் தாமரைப் பூவண்ணன், இராம.சந்திரசேகரன், கவி.முருகபாரதி ஆகியோரின் சாதனைகளைப் பாராட்டி விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

விழாவின் சிறப்பு விருந்தினராக மலேசிய முன்னாள் விளையாட்டுத்துறை இணையமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் கலந்து கொண்டு அனைவருக்கும் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவின் முத்தாய்ப்பாக மாணவர்களின் கதை மற்றும் கவிதைப் பேச்சு எல்லோரையும் ஈர்த்தது நிகழ்வின் முன்னதாக நள்தவனம் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கிட இறுதியாக அந்தோணி மாசிலாமணி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் தமிழ் ஆர்வலர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

(Visited 211 times, 1 visits today)