குணா

நூல் : கல்லறை சேரும் காற்று
ஆசிரியர் : மா. சிவசோதி
விலை : 250/=

”புதுக்கவிஞன் ஒருவனுக்கே உரித்தான ஏற்றமும் இறக்கமுமாக” கல்லறை சேரும் காற்று ” கவிதைத் தொகுதியில் ஓர் உயிர்ப்புள்ள கவிஞனாக மா.சிவசோதி என்ற இளைஞனை தரிசிக்க முடிகிறது” என்ற எழுத்தாளர் ச.முருகானந்தனின் முன்னுரை பொருத்தமானதே.

வகுப்பறை தொடக்கம் முதிரா நினைவுகள் வரை அனைத்துக் கவிதைகளும் உணர்வு பூர்வமானவை ”கலைமகள் வாசம் கொள்ளும் கலை பல கற்ற களம் அது” என்ற வரிகள் வகுப்பறையை கட்டிடமாக பார்க்கும் பலரின் கோணல்களிலிருந்து வித்தியாசப்படுகிறது.

இழந்த நண்பனுக்கான சமர்ப்பணமாக வெளியாகியுள்ள இந்நூல் ”மண் மீது நேசம் கொண்டவனே நீ உன் மண்ணோடு தூங்குகிறாய்” என்ற உரய வைக்கும் கவிவரிகள் அருமை.

இக்கவிதையின் தலையங்கத்துடன் ” கல்லறை சேரும் காற்று” நூல் பல கவிதை தொகுப்புகளுடன் வெளியாகியுள்ளது

(Visited 30 times, 1 visits today)