வேதநாயகம் தபேந்திரன்நூலின் பெயர்; மெல்ல நகும்
நூலாசிரியர்; கு.றஜீபன்

வகை ;கவிதை
வெளியீடு ;பூவரசி பதிப்பகம், அண்ணாநகர் கிழக்கு, சென்னை 600102.

டமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பண்பாட்டலுவலரான ஏழாலை தந்த குலசிங்கம் றஜீபன் எழுதிய நூல் கவிதைத் துறையில் ஈழம், சர்வதேசம் ரீதியாக ஓரளவு அறியப்பட்டவர்களில்
கு. றஜீபனும் ஒருவர்.

மிக அண்மையில் ஈழத்து தமிழ்க் கவிதைக் களஞ்சியம் எனும் கவிதை நூல் ஒன்றை வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டது.

அவ் வெளியீட்டில் ஈழத்து தமிழ் கவிஞர்களில் தனித்துவ முத்திரை பதித்தவர்களின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.அப்பணிக்காக அயராது உழைத்தவர்களில் முதன்மையானவர் கு.றஜீபன்

”அனிச்ச மலரில் தெளித்த பனியாய் இருக்கும் அணங்கே, விடுகதைகள் போதுமடி உந்தன் விழிகள் கடுகளவும் கலப்படமில்லாத கவிதைகள் போல்….” என நீளும் கவிதை தரும் சுவை அருமை.

நாண நகை, களவுப் பார்வை, மொழி பேசும் விழிகள், காதல் போதை தென்றலின்
சினேகிதி விழி வீச்சு விழிகளில் எழுதும் கவிதை கனி விழிகள், செவ்விள நீர் போல என பெண்கள் தொடர்பான கவிதை வர்ணனைகளாக இந்தக் கவிதைத் தொகுப்பு அமைகிறது.

ஒவ்வொரு கவிதைகளின் முடிவிலும் தடித்த எழுத்தில் அக் கவிதையின் சாராம்சம் எனக் குறிக்கும் ஓர் பதிவு வருகின்றது.

அமைதியாக ஆழமாக வாசிக்கும் போது கு.றஜீபனின் கவிதை என்ன கூற வருகின்றது என்பதை உணரலாம்.

ஈழத்தில் மட்டுமன்றி இந்திய வெளியீட்டகங்கள் மூலமும் கவிதை நூல் வெளியீடும் இவரது திறமை போற்றுதற்குரியது.

யாழ்ப்பாணத் தமிழ் சங்கத்தின் முதன்மை உறுப்பினர்களில் ஒருவரான இவர் மரபுக் கவிதைப் பயிலரங்கம் ஒன்றை நடத்தி போற்றுதற்குரிய பணியையும் செய்து வருகின்றார்.

 

(Visited 43 times, 1 visits today)