மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் இதுவரை வெளிப்படுத்தப்படாத தகவல்களை வெளிப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரியவிடம் ஆலோசனை கோரியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் இந்த ஆலோசனையை கடிதம் ஒன்றின் மூலம் சட்ட மா அதிபரிடம் கோரியுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியசின் கம்பனியிடம் பணம் பெற்ற 118 பேர் தொடர்பில் தற்பொழுது அரசியல் களத்தில் அதிகம் பேசப்படுகின்றது. இவர்களின் பெயர்களை வெளியிடுமாறு அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி செயலாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

(Visited 19 times, 1 visits today)