ஆண்ட்ராய்டு போனில் பதிவிறக்கம் செய்யப்படும் ஆப்களில் சுய விபரங்கள், வங்கி தகவல்களை திருடும் புதிய வைரஸ்கள் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சைபர் கிரைம் பிரிவுக்கு ஆலோசனைகள் வழங்கும் இந்திய கணினி அவசர நிலை பொறுப்புக்குழு, (ஊநுசுவு) தற்போது இணையத்தில் வங்கி தகவல்களை திருடும் வைரஸ்கள் உலாவி வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, விர்ச்சுவல் கேர்ள் பிரண்ட், பான்டா பேங்கர் ஆகிய இரு மொபைல் ஆப்கள் வங்கி தகவல்கள், மற்றும் சுயவிபரங்கள் திருடும் ஆப்களாக செயல்படுவதாக கூறப்படுகிறது. எனவே, ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் மிக கவனமாக இருக்கவேண்டும் என்றும் தேவையில்லாத மொபைல் ஆப்கள், வீடியோ கேம்களை டவுன்லோடு செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இது குறித்து சி,ஆர்டி எனப்படும், இந்திய கணினி அவசர நிலை பொறுப்புக்குழு கூறியதாவது;

தற்போது இணையவழிக் குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், பயன்பாட்டாளர்கள் யாரும் தேவையில்லாமல் வரும் ,மெயில்கள் எதையும் ஓபன் செய்ய வேண்டாம். ஒரு வேளை உங்களுக்கு தெரிந்த நபர் இமெயில் அனுப்பியிருந்தால் கூட, அதில் உள்ள யுஆர்எல் கிளக் செய்ய வேண்டாம். சம்பந்தப்பட்ட நபரிடம் அது என்னவென்று கேட்டு விட்டு, முக்கியமானவை என்றால் ஆண்டி வைரஸ் மூலம் ஸ்கேன் செய்து பயன்படுத்துங்கள்.

இதே போல்இ சுருக்கமான யுஆர்எல் லிங்க் உடைய எதையும் ஓபன் செய்யம் போது மிகக்கவனமாக இருக்கவும். கூகுள் பிளே ஸ்டோரில் வெரிஃபை செய்யப்பட்ட மொபைல் ஆப்களை மட்டும் பயன்படுத்தவும்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 19 times, 1 visits today)