ஏவுகணைகளை வைத்து உலகை மிரட்டிவரும் வடகொரியா, தன்வசம் வைத்துள்ள அணு ஆயுதங்களை தங்களிடம் தந்தால் வாங்கிகொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வடகொரியாவின் வடகிழக்கில் மண்ட்டாப் மலைப்பகுதியில் உள்ள புங்யே-ரி பகுதியில் அந்நாடு அணு குண்டு பரிசோதனை நடத்தும் மையத்தையும், இதற்காக மலைகளை குடைந்து வெட்டப்பட்ட ரகசிய சுரங்கங்களையும் நிர்மூலமாக்கி மூடிவிட வடகொரியா அரசு முடிவெடுத்தது.

இதைதொடர்ந்து,அணு குண்டு பரிசோதனை மையம் தகர்க்கப்படுவதை நேரில் வந்து பார்க்குமாறு உலகின் முக்கிய ஊடகங்களுக்கு வடகொரியா அரசு அழைப்பு விடுத்திருந்தது. நேற்று அந்த இடமும், சுரங்கங்களும் தகர்க்கப்பட்ட காட்சிகளை சில ஊடகங்கள் யூடியூபில் வெளியிட்டுள்ளன.

(Visited 63 times, 1 visits today)