அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் ஜனாதிபதி அந்த வருடம் குறித்து பேசுவார். அந்த நிகழ்விற்கு மிகவும் முக்கியமான நபர்கள் மட்டும் அழைக்கப்படுவார்கள்.

இந்த நிலையில் அந்த விழாவிற்கு ஹைதராபாத்தை சேர்ந்த ‘சுனாயானா டுமாலா’ என்ற பெண் அழைக்கப்பட்டு இருக்கிறார். இவருடைய கணவர் ‘ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா’ சென்ற வருடம் அமெரிக்காவில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

இந்த நிகழ்விற்கு இன்னும் சிலரும் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற வருடம் பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டு மக்களுக்கு எதிராக அடிக்கடி தாக்குதல் நடைபெற்று வந்தது. அப்போதுதான் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்ற ஹைதராபாத்தை சேர்ந்த இந்தியர் பாரில் வைத்து கொலை செய்யப்பட்டார். இன்னொரு இந்தியருக்கு இதில் மோசமாக காயம் ஏற்பட்டது.

ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லாவை சுட்ட நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டு நபர்களை வெளியே அனுப்ப வேண்டும் என்று அந்த நபர் பேட்டி அளித்து பரபரப்பு ஏற்படுத்தினார். இந்த சம்பவம் காரணமாக அமெரிக்க அதிபருக்கு எதிராகவும் கருத்துக்கள் பேசப்பட்டது.

தற்போது ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லாவின் மனைவி சுனாயானா டுமாலாவுக்கு உயரிய மரியாதையை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு நடக்கும் அதிபரின் விழா ஒன்றிற்கு இவர் அழைக்கப்பட்டு இருக்கிறார். உயர்பதவியில் இல்லாத இந்தியர்ஒருவர் இந்த நிகழ்விற்கு அழைக்கப்படுவது இதுவே முதல்முறை.

இந்த விழாவிற்கு மறைந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் மனைவிகள் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் சில முன்னாள் சிஐஏ அமைப்பை சேர்ந்த நபர்களும் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப் சென்ற வருடம் முழுக்க நடந்த முக்கிய சம்பவங்கள் குறித்து இதில் பேசுவார்.

(Visited 71 times, 1 visits today)