பாலிவுட் நடிகை ரியா சென்னின் பிகினி புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. பாலிவுட் நடிகை ரியா சென் தனது காதலர் ஷிவம் திவாரியை கடந்த ஆண்டு திடீர் என்று ரகசிய திருமணம் செய்தார். அவர் கர்ப்பமானதால் தான் திடீர் திருமணம் என்ற பேச்சு கிளம்பியது. நான் ஒன்னும் கர்ப்பமாக இல்லை என்று ரியா பின்னர் விளக்கம் அளித்தார்.

ரியா சென் தனகு கணவருடன் கோவாவுக்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளார். அங்கு பிகினியில் எடுத்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

கணவர் ஷிவம் திவாரியுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபி ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அவர் ரொம்ப பொறுமையானவர் என்று தெரிவித்துள்ளார் ரியா சென்.

திருமணத்திற்கு முன்பு தான் ரியா சென் பிகினி புகைப்படங்கள், அரைகுறை ஆடையில் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். தற்போது திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து பிகினி புகைப்படங்களை வெளியிடுவது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

என் மகள்கள் ரைமா மற்றும் ரியா ஆகியோரை மெயின்டெயின் செய்வது ரொம்ப காஸ்ட்லி. அதனால் அவர்களை திருமணம் செய்பவர்கள் நிச்சயம் பணக்காரர்களாக இருந்தால் மட்டுமே முடியும் என நடிகை மூன் மூன் சென் முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 225 times, 1 visits today)