நடிகை ஸ்ரேயா தனது எதிர்கால திட்டம் குறித்து தெளிவாக உள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் ஒரு ரவுண்டு வந்தவர் ஸ்ரேயா சரண். தற்போது அவரது மார்க்கெட் டல்லடித்துள்ளது.

இருப்பினும் தன்னை தேடி வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். 2018ம் ஆண்டு அவருக்கு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. 4 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சினிமா குறித்து ஸ்ரேயா கூறியதாவது,

தொடர்ந்து சினிமா படங்களில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் எத்தனை ஆண்டுகள் நடிப்பீர்கள் என்று என்னிடம் கேட்கிறார்கள். ஹாலிவிட்டில் நடிகை மெரில் 60 வயதை தாண்டியும் நடிக்கிறார். அவரை போன்று நானும் தொடர்ந்து நடிப்பேன்.

தமிழில் காயத்ரி, தெலுங்கில் வீர போக வசந்த ராயலு, காயத்ரி, இந்தியில் தட்கா ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு கதக் நடன கலைஞர் ஆவேன்.

சினிமா படங்களில் பிசியாக இருந்ததால் பல ஆண்டுகளாக நடன பயிற்சியில் ஈடுபட முடியாமல் போனது. தற்போது மீண்டும் நடன பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

இளம் தலைமுறையினர் நம் பாரம்பரிய நடனங்களான பரதம், குச்சுபுடி, கதக் உள்ளிட்டவற்றை கற்க வேண்டும். அவர்களுக்கு அந்த ஆர்வத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறேன் என்றார் ஸ்ரேயா.

(Visited 150 times, 1 visits today)