இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தெற்கு லண்டனில், கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அருனேஸ் தங்கராஜா என்ற 28 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி, நேற்று அதிகாலை 3.30 அளவில் தாக்குதலுக்கு இலக்கான நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில், 44 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

(Visited 62 times, 1 visits today)