தனது வாடிக்கையாளர்களுக்கு மேலும் உயரிய சேவையை வழங்கும் நோக்கில் மக்கள் வங்கியால் அறிமுகம் செய்யப்பட்ட பீபள்ஸ் வேவ் (People’s Wave) மொபைல் பேங்கிங் எப்’ மிகவும் குறுகிய காலத்தில் சாதனை படைத்து முன்னிலையை அடைந்துள்ளது.

அதற்கு அமைவாக குறுகிய காலத்தினுள் ஒரு இலட்சம் பதிவிறக்கத்தை கடந்துள்ள பீபள்ஸ் வேவ் (People’s Wave) மொபைல் அப்ளிகேஷன், அப்பள் (Apple) மற்றும் அன்ட்ரொய்ட் (Android) சந்தையில் உயரிய தரமூட்டல் மற்றும் குணாதிசயமிக்க வாடிக்கையாளர் பிரதிபலிப்பைப்பெற்று மிக விரைவாக பிரபல்யம் பெற்றுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

தனது டிஜிட்டல் வங்கி செயற்பாட்டை மேலும் விரைவுபடுத்தி 2020 ஆம் ஆண்டளவில் டிஜிட்டல் மயப்படுத்தலில் சிறந்த வங்கியாக திகழ்வதற்கு ஒரு கட்டமாக, நவீன தொழில் நுட்பத்துடன் விசேட வசதிகளுடன் கூடிய ஒரு எப் (App) ஆக “பீபள்ஸ் வேவ் (People’s Wave)’ அறிமுகம் செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு மிகவும் செயல் திறன்மிக்க மற்றும் இலகுவாக தமது நிதியியல் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது இதன் அடிப்படை நோக்கமாகும்.

பீபள்ஸ் வேவ் எப் பயன்படுத்துவதால் பெரும்பாலான வங்கிச் சேவைகளை கிளைகளுக்கு செல்லாது தமது கையடக்க தொலைபேசி மூலம் மேற்கொள்வதுடன், 24 மணித்தியாலமும் இடையூறின்றி இச்சேவைகளை பெற முடியுமானது இதன் விசேட தன்மையாகும்.

(Apple மற்றும் அன்ட்ரொய்ட் (Android) செயற்பாட்டு தொகுதியான அப்பிள் ஸ்டோர் (Apple Store) மற்றும் அன்ட்ரொய்ட் ப்ளே ஸ்டோர் (Android Play Store) மூலம் பீபள்ஸ் வேவ் (People’s Wave) எப் இனை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இச் சேவைக்காக தமது பதிவினை தாமாகவே செய்து கொள்ளக்கூடியதாகவும், அதனூடாக 50 வகையான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தனக்குரிய சகல நடைமுறை கணக்கு, சேமிப்பு கணக்கு, மற்றும் நிரந்தர வைப்புக் கணக்குகளின் மீதிப் பரிசோதனை, கடன் வசதிகள், அடகு வைத்த பொருட்கள் மற்றும் கடன் அட்டைகளின் கணக்கு விபரம் பரிசோதனை செய்தல், தனது வங்கிக் கணக்கிலிருந்து இன்னுமொரு கணக்கிற்கு பண மாற்றம் செய்தல், வேறு வங்கியொன்றின் கணக்கிற்கு பணம் மாற்றம் செய்தல், வேறொரு நபருக்குரிய கணக்கிற்கு பணம் மாற்றம் செய்தல், அடகு தவணைக் கட்டணம் செலுத்துதல், கடனட்டை கட்டணம் செலுத்துதல் போன்றவற்றுடன் காசோலைகள் சேவையும் அடங்கியுள்ளது. நீர், தொலைபேசி, மற்றும் மின்சாரக் கட்டண சிட்டைகள் செலுத்துதல்களையும் உடனடியாக மேற்கொள்ள முடியும்.

மக்கள் வங்கியின் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்கள் அருகிலுள்ள கிளைக்கு வந்து மக்கள் வங்கியின் கணக்கொண்றை ஆரம்பித்து இச்சேவையின் உயர் அனுகூலங்களை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு தேவையான ஆலோசனைகளை உடனடி அழைப்பு இலக்கம் 1961 மூலம் பெறமுடியும்.

(Visited 96 times, 1 visits today)