டாக்டர் கே.எஸ். ஜெயராணி

பெரும்பாலான பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே இரத்தசோகை உள்ளவர்களாக இருக்கின்றனர். கர்ப்பத்தின் போது இரத்த சோகை மேலும் அதிகரிக்கிறது.

பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க ஒரு பெண்ணுக்குப் புரதச் சத்தும் இரும்புச்சத்தும் அதிகமாக உள்ள உணவுகள் தேவைப் படுகின்றன. கர்ப்பம் தரித்த பெண்கள் மிகவும் வெளிறிக் காணப்பட்டாலும் பலவீனமாக இருந்தாலும், அவர்களுக்கு புரதச்சத்தும் இரும்புச்சத்தும் அதிகம் உள்ள உணவுகள் தேவைப்படுகின்றன என்று அர்த்தம்.

மொச்சை, பயறு, பருப்பு வகைகள், நிலக்கடலை, பொட்டுக்கடலை, கோழி இறைச்சி, பால், பாலாடைக்கட்டி, முட்டை, ஆட்டிறைச்சி, மீன், கீரைவகைகள் போன்றவற்றை கர்ப்பிணிகள் சாப்பிடுவதன் மூலம் அதிகப்படியான புரதச்சத்தினை பெறமுடிகிறது.

ஊட்டச்சத்து உள்ள உணவுகள் போதுமான அளவு கிடைக்காத போது இரும்புச்சத்து உள்ள மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். குழந்தை பிறப்பின் போது ஏற்படும் அதிகமான இரத்தப்போக்கினை தடுக்க போலிக்ஆசிட் போன்ற இரும்புச்சத்துஉள்ள மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நல்லது.

சிரைப்புடைப்பு

இதேவேளை கால்களிலிருந்து வருகிற வெரிகோஸ் சிரைகள் சிசுவின் எடையால் அழுத்தப்படுவதால் கருவுற்ற காலத்தில் சிரைகளில் வீக்கம் ஏற்படுவது சகஜம். அடிக்கடி கால்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயர்த்தி வைக்க வேண்டும். சிரைகள் மிகவும் வீங்கி விட்டாலோ அவற்றில் வலி எடுத்தாலோ அவற்றை கிரிப் பேண்டேஜ் கொண்டு அழுத்தி கட்ட வேண்டும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கலை தவிர்க்க நிறைய தண்ணீர் குடிக்கவும். நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ள கீரை, மரவள்ளிக் கிழங்கு, கொய்யா, சாத்துக்குடி, வாழைப்பழம், கொத்தவரங்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ போன்ற உணவுப் பொருள்களையும் சாப்பிட வேண்டும். நிறைய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.

அரிப்பு

கருவுற்ற காலத்தில் உடல்முழுவதும் அரிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது.

கால்பிடிப்பு

மிதமாகப் பிடித்து விடுவதன் மூலமும் சூட்டு ஒத்தடம் கொடுப்பதாலும் இதனைக் குறைக்கலாம். கால்சியம் அடங்கிய வைட்டமின் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளலாம்.

(Visited 31 times, 1 visits today)