மகாராஷ்டிரா தமிழ் எழுத்தாளர் மன்றமும் இனிய நந்தவனம் மாத இதழும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலக்கியக் கொண்டாட்டம் நிகழ்வு மாட்டுங்கா குஜராத்தி சேவா மண்டல் குளிரரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மும்பைத் தமிழ்ச் சங்கத் தலைவர் எஸ். இராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இனிய நந்தவனம் மாத இதழின் ஆசிரியர் சந்திரசேகரன் வரவேற்புரையாற்றினார். தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் பேராசிரியர் சமீரா மீரான் தொடக்கவுரை நிகழ்த்தினார்.

திரைப்பட இயக்குநர் யார் கண்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் மும்பை புறநகர் தி.மு.க. செயலாளர் அலிசேக் மீரான், மராத்திய மாநில தமிழ் மாணவர் மன்ற அமைப்பாளர் வழக்கறிஞர் இர. இராசாமணி, ஓய்வு பெற்ற இலங்கை ஆசிரியர் சரோஜினிதேவி கனகரத்தினம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழ் எழுத்தாளர் மன்றத்தின் பொதுச் செயலாளர் கவிஞர் வதிலை பிரதாபன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மன்றப் பொருளாளர் அ. இரவிச்சந்திரன் நன்றியுரையாற்றினார்.

மராத்திய மாநில தமிழ்ச்சங்கத் தலைவர் எஸ். அண்ணாமலை, நவிமும்பைத் தமிழ்ச்சங்கத் தலைவர் எஸ்.ஏகாம்பரம், மும்பைத் தமிழ்ப் பிரமுகர்கள் மு.ச.காசிலிங்கம், க. வ. அசோக்குமார், கு.ஆறுமுகப் பெருமாள், பு.தேவராஜன், கி.வெங்கட்ராமன், இல. பாஸ்கரன், வே.சதானந்தன், ஜான் சாமுவேல், கே.ஆர்.சீனிவாசன், எம்.என்.நரசிம்மன், கி.சாந்தாராம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக அன்னை கதிஜா கல்லூரி முதல்வர் முனைவர் சுமதி தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது, இக்கவியரங்கில் ‘தமிழென்று கொட்டு முரசே’ என்ற தலைப்பில் கவிஞர் ஜி.வி.பரமசிவம், ‘தன்மானம் உயிரென்போம்’ என்ற தலைப்பில் கவிஞர் தமிழ்நேசன், ‘தடையுடைப்போம் தமிழுக்காய்’ என்ற தலைப்பில் திருவாரூர் கவிஞர் சக்திவேல், ‘தடம் பதிப்போம் தமிழருக்காய்’ என்ற தலைப்பில் கவிஞர் பிரவினா சேகர், “எத்திசையும் முழங்கிடுவோம்’ என்ற தலைப்பில் காரைக்குடி கவிஞர் பா. தென்றல், ‘தமிழனென்று தலைநிமிர்வோம்’ என்ற தலைப்பில் பாவலர் முகவைத் திருநாதன் ஆகியோர் கவிதை படித்தனர்.

கலை, இலக்கியம் மற்றும் மக்கள் நலப் பணிகளில் சிறப்பாக பங்காற்றி வருவோருக்கு இந்நிகழ்ச்சியில் விருதுகளும் பாராட்டிதழ்களும் வழங்கப்பட்டன.

தொழிலதிபர் பசீருத்தீன், கவிஞர் திருவாரூர் சக்திவேல், கவிஞர் காரைக்குடி பா. தென்றல், கல்வியாளர் அமலா ஸ்டான்லி, பாவலர் முகவைத் திருநாதன், எழுத்தாளர் ஞான. அய்யாபிள்ளை, தொழிலதிபர் இ. இலட்சுமணன், சொற்பொழிவாளர் மிக்கேல் அந்தோணி, கவிஞர் வ.இரா. தமிழ்நேசன், கவிஞர் ஜி.வி.பரமசிவம், மக்கள் நலச் செயற்பாட்டாளர்கள் தி.அப்பாதுரை, வெண்புறா செல்வகுமார், பெ.கணேசன், ந.வசந்த குமார். கு.மாரியப்பன், சோ. பா. குமரேசன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நிறைவாக விருதாளர்கள் சார்பாக கல்வியாளர் அமலா ஸ்டான்லி ஏற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை மகாராஷ்டிரா தமிழ் எழுத்தாளர் மன்ற நிர்வாகிகளும், இனிய நந்தவனம் குழுவினரும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

(Visited 89 times, 1 visits today)