தென்கொரியாவை தாயகமாக கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் எல்.ஜி நிறுவனம் இந்தியாவிலும் அதன் மின்சாதன பொருட்களுக்காக பிரசித்தி பெற்றது. இந்த எல்.ஜி நிறுவனத்தின் தலைவர் கூ போன் மூ கடந்த 1 வருடமாக உடல்நலம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் உடல் நிலை மோசமடைந்ததால் 73 வயதான கூ போன் மூ இன்று மரணமடைந்ததாக எல்.ஜி நிறுவனம் தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கூ போன் மூ உடல்நிலை மோசமாக இருந்ததால் கடந்த வியாழன் அன்று நடைபெற்ற கூட்டத்தில் அடுத்த தலைவராக கூ போன் மூவின் மகன் கூ குவாங் மோவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி இவரது குடும்பத்திலிருந்து எல்.ஜி குழுமத்தின் 4-வது தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தற்போது கூ குவாங் மோ எல்.ஜி குழுமத்தின் உயர்மட்ட அதிகாரிகளில் ஒருவராக பணிபுரிந்து வருகிறார். கூ போன் மூவின் இறுதிச் சடங்குகள் குறித்த தகவல்களை வெளியிட அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 80 times, 1 visits today)