எதிர்வரும் வருடங்களில் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கான சூழல் உள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினையொட்டி நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,இரா.துரைரெட்னம் உட்பட பிரதேசபையின் தவிசாளர்கள்,உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

(Visited 47 times, 2 visits today)