முள்ளியாவாய்க்கால் நினைவு தினமாகிய இன்று யாழில் ஈகைச்சுடரேற்றப்பட்டு உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுகின்றது.

இன்று காலை 11 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் ஈகைச்சுடரேற்றப்பட்டு இந்த நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பொது மக்களுக்கு ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 4 வருடங்களில் இல்லாத அளவுக்கு பொதுமக்கள் படையெடுத்து வந்துள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து பல்லாயிரக்கணக்காண மக்கள் படையெடுத்து வந்ததுடன், யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்தும் மாணவர்களின் பேரணி ஒன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தை வந்தடைந்தது.

மதத்தலைவர்களின் பூஜை வழிபாடுகளும் இதன்போது நடைபெற்றுள்ளது. அத்துடன் ஈகைச்சுடரை சற்றி பொதுமக்கள் குவிந்திருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

(Visited 71 times, 1 visits today)