30 வருட யுத்தத்தை முற்றாக ஒழித்த இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பை பலரும் மறந்துபோயுள்ளதாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“உலக நாடுகள் எவையுமே முற்றாக யுத்தத்தை ஒழிக்காத போது தனிப்பட்ட நலன்களை மாத்திரம் கருத்திற்கொள்ளாமல் மக்களுக்கு முற்றாக யுத்தத்தை ஒழித்த இராணுவம் இலங்கையில் மாத்திரமே உள்ளது.

மக்களின் பாதுகாப்பு மற்றும் நிலைப்பை கருத்திற்கொண்டே இராணுவம் இந்த செயற்பாடுகளை முன்னெடுத்தது. இதனை பலரும் மறந்துபோயுள்ளனர்.

இந்த நாட்டின் அப்பாவி மக்கள் பலரை பயங்கரவாதிகள் கொன்று குவித்தனர். அத்துடன் எல்லை கிராமங்களில் இருந்த மக்களின் உயிர் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட முப்படையின் செயற்பாடுகள் மறக்க முடியாதவை.

(Visited 32 times, 1 visits today)