தமிழகத்தில் இலங்கைப் பெண் தீக்குளித்து தற்கொலை
2017-08-10 23:27:17 | General

சென்னை:   சென்னை மாநகராட்சியில் புழல், காவாங்கரை பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இலங்கைப் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். 

குடும்பப் பிரச்சினை காரணமாக கடந்த 4ஆம் திகதி மண்ணெண்ணெய் ஊற்றி
 தீ வைத்துக்கொண்ட இவர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். 

இந்தச் சம்பவத்தில் 28 வயதான சுசாந்தினி என்ற இலங்கைப் பெண்ணே உயிரிழந்துள்ளார். 

இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் புழல் சிறைக்காவலராக இருந்த இசை செல்வன் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது, வேலூர் சிறையில் இசை செல்வன் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இசை செல்வனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மனைவியான சுசாந்தினியையும் 3 பிள்ளைகளையும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனால், மனமுடைந்து போன   சுசாந்தினி,  தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துள்ளார். இதையடுத்து அவர்  மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இது குறித்து புழல் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

TOTAL VIEWS : 332
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
0vbik
  PLEASE ENTER CAPTA VALUE.