வத்திக்கானில் சிகரெட்டுக்குத் தடை
2017-11-10 15:09:32 | General

ரோம், வத்திக்கான் நகரில் சிகரெட் விற்பனைக்கு தடை விதித்து போப் ஆண்டவர் உத்தரவிட்டுள்ளார்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமாக போற்றப்படுவது இத்தாலி நாட்டின் வத்திக்கான் நகரம். இங்கு சிகரெட் விற்பனைக்கு தடை விதித்து போப் ஆண்டவர் பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.

"மக்களின் உடல்நலம் பாதிக்கும் செயலை இந்த புனித நகரம் ஒரு போதும் செய்யாது" என்று இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புகை பிடிப்பதால் ஆண்டு தோறும் 70 லட்சம் பேர் பலியாவதாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. வத்திக்கானில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.72 கோடி மதிப்பிலான சிகரெட்டுகள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

TOTAL VIEWS : 114
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
crc5u
  PLEASE ENTER CAPTA VALUE.