முதல்வர் ஜெ.வுக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது; மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு​
2016-12-05 09:35:50 | General

சென்னை: மாரடைப்பு காரணமாக தீவிரமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதயநாளத்தில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய் இந்த ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதயநாளத்தில் உள்ள அடைப்பை அறுவை சிகிச்சை இன்றி சரி செய்யக் கூடிய மருத்துவ முறை ஆஞ்ஜியோ சிகிச்சை ஆகும்.

ஆஞ்ஜியோ சிகிச்சை முடிந்த நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தற்போது முதல்வர் ஜெயலலிதா உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவிற்கு இதய நோய் மருத்துவர்கள், சுவாசயியல் நிபுணர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தீவிர சிகிச்சை நிபுணர்களும் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தனர்.

24 மணிநேர கண்காணிப்பிற்கு பிறகு முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த தெளிவான தகவல் தெரிய வரும். மேலும் தற்போது, முதல்வரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அப்போலோ மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TOTAL VIEWS : 537
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
wrk0h
  PLEASE ENTER CAPTA VALUE.