சீரியலால் உயிரிழந்த சிறுமி
2017-12-03 10:51:56 | General
டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் வரும் தீ நடனத்தை பார்த்து அதேபோல் நடனமாட முயற்சித்தபோது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு சிறுமி உயிரிழந்துள்ளார்.
 
கர்நாடக மாநிலம் தாவணகரே மாவட்டத்திலுள்ள ஹரிஹரா பகுதியை சேர்ந்தவர் மஞ்சுனாத். இவரது மனைவி சைத்ரா. இவர்களுக்கு பிரார்த்தனா என்ற 8 வயது மகள் உள்ளார். பிரார்த்தனா அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி பிரார்த்தனா கன்னடத்தில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நந்தினி என்ற சீரியலை வழக்கமாக பார்த்து வந்துள்ளார்.
 
சம்பவத்தன்று பெரியவர்கள் யாரும் வீட்டில் இல்லாத நிலையில் சிறுமி பிரார்த்தனா, நந்தினி சீரியலை பார்த்துக்கொண்டிருந்தாள். அதில் நடிகை ஒருவர் தன் கைகளில் தீப்பந்தம் ஏந்தியவாறு நடனமாடியுள்ளார்.
 
இதனைப் பார்த்த சிறுமி தானும் அவ்வாறே ஆடவேண்டும் என முயற்சி செய்துள்ளார். எதிர்பாராதவிதமாக சிறுமியின் உடையில் தீ பற்றிக்கொண்டது. இதனால் வலி தாங்க முடியாமல் சிறுமி அலறினார். சிறுமியின்
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். 15 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
 
இதனையடுத்து சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க மக்களிடையே விழிப்புணர்வு நடத்தவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
TOTAL VIEWS : 54
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
cglw9
  PLEASE ENTER CAPTA VALUE.