பிரித்தானியா வாக்குபதிவு தொடங்கியது
2017-06-08 11:53:20 | General

பிரித்தானியாவின் பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொது தேர்தலுக்கான வாக்குபதிவு தொடங்கியுள்ளது.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு இரவு 10 மணிவரை நடைபெறவுள்ளது.

பிரித்தானியா முழுவதும் 40000 மையங்களில் வாக்குபதிவு நடைபெறுகிறது. மொத்தமாக 650 நாடாளுமன்ற உறுப்பினர்களை 46.9 மில்லியன் மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் தெரிவு செய்ய இருக்கிறார்கள்.

தபால் ஓட்டுகள் சில ஏற்கனவே போடப்பட்டு விட்டன.

பள்ளிக்கூடங்கள், சமூக மையங்கள், சமுக மன்றங்கள் போன்ற இடங்களில் வாக்குபதிவு நடைபெற உள்ளன.

இன்று இரவு 10 மணிக்கு வாக்குபதிவு முடிந்தவுடன், வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவுகள் நடு இரவிலிருந்து வெளியாக தொடங்கும்.

தேர்தலின் முழு முடிவுகள் நாளை மதியத்துக்குள் தெரியவரும்.

கடந்த 2015ல் நடந்த பொது தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி மொத்தமுள்ள 650 இடங்களில் 331 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.

தற்போது பன்முனை போட்டி நிலவினாலும் தெரசா மே சார்ந்திருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்கட்சி தலைவரான ஜெர்மி கார்பன் சார்ந்திருக்கும் தொழிலாளர் கட்சிக்கும் தான் பலத்த போட்டி நிலவுகிறது.

இதுவரை மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள் பலவற்றில் தெரசா மேவும் அவர் சார்ந்திருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியும் தான் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

TOTAL VIEWS : 515
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
akzm6
  PLEASE ENTER CAPTA VALUE.