பத்து கோடி ரூபா நஷ்டஈடு கோருகிறது லைக்கா நிறுவனம்
2017-03-27 14:27:06 | General

பத்துகோடி ரூபா  நஷ்டஈடு கேட்டு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு லைக்கா நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய வேல்முருகன், லைக்கா நிறுவனத்திற்கும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கும் தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார்.


இந்நிலையில் இது தொடர்பாக லைக்கா நிறுவனத்தின் சார்பில் வழக்கறிஞர் அருணாசலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


லைக்கா நிறுவனத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும் தொடர்பு எதுவும் இல்லை. இதேவேளை இலங்கை அரசாங்கத்துடனும் எந்தத் தொடர்பும் கிடையாது.


ஆனால் தமிழக கட்சிகள் தவறான தகவலை வெளியிட்டு தங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றன.


தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எமது நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பேசியிருக்கிறார். எனவே 10 கோடி ரூபா நஷ்டஈடு வழங்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


தவிர, தனது கருத்திற்காக வேல்முருகன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எனினும் இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் மன்னிப்பு கோரும் பேச்சுக்கே இடம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

TOTAL VIEWS : 504
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
ylrp9
  PLEASE ENTER CAPTA VALUE.