வாய்வழி செக்ஸில் ஈடுபட கட்டாயப்படுத்தும் கணவன் மீது புகார்
2017-11-07 14:02:43 | General

கணவரின் அந்தரங்க உறுப்பில் வாய்வைக்க கட்டாயப்படுத்துவதாக மனைவி பூகார் அளித்துள்ளார் .

திருமணம் ஆன பின்பும் மனைவியின் சம்மதம் இல்லாமால் உடலுறவில் ஈடுபடுவது கற்பழிப்புதான் என்று சட்டம் சொல்கிறது.


இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள், தங்கள்கணவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது தெரியவந்துள்ளது.

குஜராத்தை சேர்ந்த பெண் தனது கணவர் வாய்வழி செக்ஸில் ஈடுபட சொல்கிறார் என்றும் இது கற்பழிப்புக்கு சமமாகும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.


ஆனால் அவரின் கணவர் இது கற்பழிப்பில் சேராது என்று பதில் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரதிவாலா, என்ன தீர்ப்பு சொல்வதென்று தெரியாமல் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக பல விளக்கங்களை குஜராத் நீதிமன்றம், அரசிடம் கேட்டுள்ளது. மனைவியை கணவன் கட்டாயப்படுத்தி இயற்கைக்கு அப்பாற்பட்ட வகையில் செக்ஸில் ஈடுபட சொன்னால், அது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377 படி தண்டனை வழங்க வேண்டுமா? இல்லை கணவன் மனைவியை வாய்வழி செக்ஸில் ஈடுபட சொன்னால் அது வன்கொடுமை தடுப்பு சட்டமான ஐபிசி 498A என்ற பிரிவில் தண்டனை வழங்க வேண்டுமா? என்று விளக்கம் தருமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கு சரியான விளக்கம் கிடைக்கும் வரை இந்த வழக்கு நிலுவையில் வைக்கப்படும் என்று நீதிபதி கூறியுள்ளார்.

TOTAL VIEWS : 839
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
yp1xk
  PLEASE ENTER CAPTA VALUE.