சீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை
2017-12-30 18:13:07 | Leftinraj

சீனாவில் ஷாங்ஸி மாகாண தலைநகர் தையு யான் நகரில் வர்த்தக மகால் உள்ளது. அங்கு மிகப்பெரிய ராட்சத நாய் பொம்மை வைக்கப்பட்டுள்ளது.

அது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முக வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. அது டிரம்ப் போன்று இடது கை விரலை மேலே தூக்கியபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் விலங்குகள் பெயரில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு நாய் புத்தாண்டு வருகிறது. அதை வரவேற்கும் வகையில் டிரம்ப் உருவத்தில் நாய் பொம்மை வைக்கப்பட்டுள்ளது.

அந்த பொம்மையின் கண் இமைகள் தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கழுத்தில் சிவப்பு பட்டை அணிவிக்கப்பட்டுள்ளது. இப்பொம்மையை பொது மக்கள் ஆர்வமாக பார்த்து செல்கின்றனர்.

கடந்த ஆண்டு சீனாவில் பூனை புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது டிரம்பை உருவகப்படுத்தி இங்கு பூனை பொம்மை வைக்கப்பட்டு அது பார்வையாளர்களை கவர்ந்தது.

TOTAL VIEWS : 153
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
t2mnz
  PLEASE ENTER CAPTA VALUE.