ரஜினிகாந்த்துடன், பா.ஜ.க வேட்பாளர் கங்கை அமரன் திடீர் சந்திப்பு
2017-03-21 18:18:25 | General

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார் கங்கை அமரன். அவர் இன்று நடிகர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரன் பா.ஜ.க.வில் இணைந்து செயல்பட்டு வந்தார். அவருக்கு கலை  இலக்கியப் பிரிவின் மாநிலத் தலைவர் பதவியும் பா.ஜ.க வழங்கியது.

இந்த நிலையில், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக கங்கை அமரன் களமிறங்குவார் என பா.ஜ.க தேர்தல் குழுச் செயலாளர் ஜே.பி.நட்டா கடந்த வெள்ளியன்று டெல்லியில் அறிவித்தார். பல பிரபலங்களின் பெயர்களை பின்னுக்குத்தள்ளி ஆர்.கே.நகர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார் கங்கை அமரன்.

இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் வீட்டில் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் சந்தித்து வாழ்த்து பெற்றார். இருவரும் கட்டியணைத்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்ட நரேந்திர மோடியும், நடிகர் ரஜினிகாந்த்தை அவரது வீட்டில் சந்தித்துப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

TOTAL VIEWS : 342
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
n5pfp
  PLEASE ENTER CAPTA VALUE.