முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு
2017-08-10 11:56:33 | General

'அ.தி.மு.கவில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்' என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசினார். சென்னை பசுமைவெளிச் சாலையிலுள்ள முதல்வர் இல்லத்தில், இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், 'அரசியலுக்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படைத் தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழக மீனவர்கள் என்று பார்க்காமல், இந்திய மீனவர்கள் என்று பார்க்க வேண்டும். நடிகர் சங்கத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அ.தி.மு.கவில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். அ.தி.மு.க அணிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதல்வரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்துப் பேசினேன்' என்றும் தெரிவித்தார். 

TOTAL VIEWS : 277
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
vehz4
  PLEASE ENTER CAPTA VALUE.