ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு  
2017-12-03 14:56:44 | Leftinraj

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ம.தி.மு.க.வின் நிலை குறித்து ஆலோசிப்பதற்காக அந்த கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் எழும்பூரில் உள்ள தாயகத்தில் இன்று காலை நடந்தது. கூட்டத்துக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்கள் சந்திப்பில் வைகோ பேசியதாவது:-

தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் மத்திய அரசை தட்டிக்கேட்க முடியாத அரசாக அதிமுக அரசு உள்ளது. நூற்றாண்டுகள் கண்ட திராவிட இயக்கத்தின் பாரப்பரியத்தை காக்க வேண்டிய கடமை உள்ளது. அதிமுக.வை இயக்கும் பாஜக அரசு ஆளுநர் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கிறது.

கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு திமுக வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்துள்ளோம் என்று அவர் கூறினார்.

 

TOTAL VIEWS : 87
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
tv1hu
  PLEASE ENTER CAPTA VALUE.