பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் இராஜினாமா?
2017-11-10 15:55:27 | Leftinraj

பிரிட்டனின் வெளியுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரீத்தி படேல் ராஜினாமா செய்துள்ளார்.

பிரிட்டனின் பிரதமர் தெரசா மேயிற்கு தனது இராஜினாமா தொடர்பில் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

விடுமுறை கால பயணமொன்றை மேற்கொண்டு இவர் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார்.  அங்குஇ அந்நாட்டு பிரதமர் உட்படஇ பல தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இதனை அவர் நாட்டிற்கு முன்கூட்டியே அறிவித்திருக்க வில்லையென குறிப்பிடப்படுகின்றது.

இதற்குஇ பிரிட்டனில் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துஇ பிரீத்தியை ராஜினாமா செய்யுமாறு வலியுறுள்ளன. இதனையடுத்தே  அமைச்சர் பதவியை பிரீத்தி ராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் தனது இராஜினாமா தொடர்பில் பிரதமர் தெரசா மேக்கு  அனுப்பியள்ள கடிதத்தில்இ ‘என் நடவடிக்கைகளால் அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்காக மன்னிப்பு கேட்கிறேன். தவறுக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என கூறியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன. 

TOTAL VIEWS : 284
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
f8rxt
  PLEASE ENTER CAPTA VALUE.