மலையில் அத்துமீறல் புகாரில் நித்யானந்தா சீடர்களிடம் விசாரணை
2017-06-30 15:57:22 | General

திருவண்ணாமலையில் உள்ள பவளக்குன்று மலையில் அத்துமீறிச் சென்று பூஜை செய்த நித்தியானந்தாவின் 7 சீடர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.


திருவண்ணாமலையில் உள்ள பவளக்குன்று மலையில் அத்து மீறிச் சென்று குடிசை அமைத்து நித்யானந்தா சீடர்கள் பூஜை செய்தனர். அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி தலைமையிலான குழுவினர் காவல்துறை பாதுகாப்புடன் கடந்த 16 ஆம் திகதி குடிசையை அகற்றி சீடர்களை வெளியேற்றினர்.

அதன் பிறகும், நித்யானந்தா சீடர்களின் அத்துமீறல் தொடர்கிறது.
பவளக்குன்று மலையில்  பூஜை செய்த நித்தியானந்தாவின் சீடர்கள் 7 பேரை பொலிஸார் பிடித்துச் சென்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பினர்.

TOTAL VIEWS : 458
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
h1cqq
  PLEASE ENTER CAPTA VALUE.