மெலானியும் மகனும் வெள்ளைமாளிகை பிரவேசம்
2017-06-12 16:59:56 | General

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்று 5 மாதங்களின் பின்னர் முதற் பெண்மணியான மெலானியா ட்ரம்பும் அவரது மகன் வரோனும் வெள்ளை மாளிகைக்கு சென்றுள்ளனர்.


மெலானியா ட்ரம்பும் 11 வயது மகனும் நியூயோர்க்கிலிருக்கும் பிரத்தியேக இல்லமொன்றில் வசித்துவந்தனர். வரோனின் பாடசாலையாண்டு நிறைவடையும் வகையில் அவர்கள் அவ்வாறு வசித்ததாக கூறப்படுகின்றது. 


ஆனால், இந்தத் தீர்மானம் தொடர்பாக பரவலாக விமர்சிக்கப்படுகின்றது. அண்மைய வருடங்களில் உடனடியாக வெள்ளை மாளிகைக்கு வருவதனை தவிர்த்துக் கொண்ட முதலாவது முதற் பெண்மணியென்று மெலானியா விமர்சிக்கப்பட்டார். 


முன்னர் ஒபாமா ஜனாதிபதியாக பதவி வகித்தபோது முதற் பெண்மணி மிச்சல் ஒபாமா தனது பிள்ளைகளின் பாடசாலைக் கல்விகளுக்கு மத்தியிலும் வெள்ளை மாளிகைக்கு உடனடியாகவே இருப்பிடத்தை மாற்றியிருந்தார்.


பி.பி.சி.

TOTAL VIEWS : 695
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
q3sdj
  PLEASE ENTER CAPTA VALUE.