பிரிட்டிஷ் தேர்தலில் வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் கோரிக்கை
2017-06-06 18:11:11 | General

பிரிட்டிஷ் பொதுத் தேர்தலில்  அந்நாட்டு வாக்குரிமையுடைய சகல தமிழ் மக்களையும் வாக்களிக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;


 பிரித்தானியா வாழ் தமிழ்  மக்கள் தம் வாக்குரிமையை தவறாது பயன்படுத்தி தம் அபிலாஷைகளை பிரித்தானிய பாராளுமன்றத்தில் வலுவாகக் குரல் கொடுக்கக் கூடியவர்களை பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்ய வேண்டும்.


இலங்கை தீவில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல், இலங்கை அரசின் தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்பினை தடுத்து நிறுத்தல், ஐ.நா. மனித உரிமை கழகத்தின் தீர்மானங்களை காலவரையறையுடனான திட்டத்தின் அடிப்படையில் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை  முன்வைத்து செயல்படும் வேட்பாளருக்கு முன்னுரிமையளித்து ஆதரவளிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.

வாக்குகளை சாதுரியமாகப் பாவித்து பாராளுமன்றில் எம்குரல்களை வலுப்படுத்துவோம் எனக் கூறப்பட்டுள்ளது. 

TOTAL VIEWS : 211
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
gukl7
  PLEASE ENTER CAPTA VALUE.