ஹிட்லர் வரைந்த ஓவியம் கிழிப்பு
2017-10-10 12:08:06 | General

இத்தாலி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்த, ஹிட்லர் வரைந்த ஓவியத்தை ஸ்குரூடிரைவர் மூலம் ஒருவர் கிழித்தார்.


நாசி தலைவரின் ஓவியம், பொதுமக்களுக்கான இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் கோபமடைந்த 40 வயதுடைய ஒருவர் இந்த தலைப்பிடப்படாத ஓவியத்தை கிழித்தார் என்று, கொரியாரே டெல்லா சேரா என்னும் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.


"பைத்தியக்காரத்தனத்திற்கான அருங்காட்சியகம்" என்று பெரியரிப்பட்ட கண்காட்சி நிகழ்ச்சிக்காக, கர்டா ஏரிக்கரையின் அருகில் உள்ள சலோ அருங்காட்சியகத்தில், தனியார் சேகரிப்பாளர் இந்த ஓவியத்தை காட்சிப்படுத்த கடனாக வாங்கியிருந்தார்.

அருங்காட்சியகத்தின் பொறுப்பாளரான ட்டோரியோ ஸ்கார்பி, ஹிட்லரின் ஓவியம் மீதான தனது எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை, அதை ஒரு குப்பை என்றே குறிப்பிடும் அவர், கண்காட்சியில், இந்த ஓவியத்திற்கு ஆதரவாக இருந்தார்.


சூபைத்தியக்காரத்தனம் என பெரியரிடப்பட்டுள்ள இந்த கண்காட்சிக்கு இந்த படமே சிறப்பாக பொருந்தும். போரை விட பைத்தியக்காரத்தனமானது ஒன்றுமில்லைசூ என்று அவர் கொரியாரே டெல்லா சேராயிடம் தெரிவித்துள்ளார்.


சூஇது ஒரு சர்வாதிகாரனின் கைவண்ணம் அல்ல, ஒரு ஈன்னின் கைவண்ணம், இது, ஓர் ஆழ்ந்த சோகமான ஆத்மாவை வெளிப்படுத்துகிறதுசூ என்றார்.

அருங்காட்சியகத்தின் தலைவரான புரூனோ குவேர், அந்த ஆயில் ஓவியத்தின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலை பார்த்தார்.


"பைத்தியக்காரனத்தனத்தை தலைப்பாக கொண்ட ஒரு நிகழ்ச்சியில், பைத்தியகாரத்தனமாக ஒன்றும் நடக்கவில்லை என்றால் நிகழ்ச்சி முழுமை பெறாது" என்றார்.


ஆனால் இதை மறுக்கும் ஸ்கார்பி, "ஒரு விரும்பத்தகாத வேலைப்பாடாக இருந்தாலும், அந்த சர்வாதிகாரியின் வெறுப்பு மற்றும் தணிக்கையை நம்முன் உருவாக்காமல், அதை தள்ளிவைத்து, அவமதிப்புடன் பார்க்கலாம்" என்று ஜெர்மனி பத்திரிக்கையிடம் தெரிவித்தார்.


அந்த ஓவியம், சரிசெய்யப்பட்டு மீண்டும் கண்காட்சியில் வைக்கப்பட்டது. புகைப்படத்தின் உரிமையாளர், தாக்குதல் நடத்தியவர் மீது எந்தப் புகாரும் அளிக்கப்போவது இல்லை என முடிவு செய்துள்ளார்.

TOTAL VIEWS : 282
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
cmi4h
  PLEASE ENTER CAPTA VALUE.