நிலைமை கைமீறிவிட்டது; லண்டன் டாக்டர் ரிச்சர்ட்
2016-12-05 16:30:54 | General

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக மோசமாக உள்ளதாக லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நேற்று மாண்புமிகு தமிழக முதல்வருக்கு திடீரென இதயத்தின் இயக்கம் முடங்கியதை கேட்டபோது வருத்தமாக இருந்தது.

அப்போலோவில் அவருக்கான சிகிச்சையைக் கொடுத்தபின், அவர் உடல் நலம் முன்னேறியதைக் கண்டு நம்பிக்கையாக இருந்தேன். ஆனால், அவர் உடல்நலம் எவ்வளவு முன்னேறினாலும், மேற்கொண்டு பிரச்னைகள் வரக்கூடிய ஆபத்து எப்போதுமே இருந்தது. 

இப்போதுள்ள நிலை மிகமிக மோசம்தான். ஆனால், இதுவரைக்கும் எங்களால் செய்ய முடிந்ததை எல்லாம் செய்துவிட்டோம். முதல்வருக்கு மிகவும் அனுபவமுள்ள, பல்துறை எக்ஸ்பர்ட்டுகள் அடங்கிய குழு சிகிச்சையளித்து வருகிறது.

இப்போது Extracorporeal life support எனும் சிகிச்சையில் இருக்கிறார். இதுதான் இருப்பதிலேயே நவீன சிகிச்சை. உலகின் சிறந்த மருத்துவமனைகள் இந்த சூழ்நிலையில் இந்த முறையைத்தான் கையாள்வார்கள்.

இந்த தொழில்நுட்பம் அப்போலோவில் இருப்பது, அம்மருத்துவமனையின் உயர் தரத்தையே காட்டுகிறது. மேலும், அப்போலோ மற்றும் எய்ம்ஸ் குழுவினர் முதல்வருக்கு எப்போதும் உலகத்தரமான சிகிச்சையைக் கொடுத்திருக்கிறார்கள். 

இந்த இக்கட்டான சூழலில் முதல்வரையும், அவரது குடும்பத்தையும், அவருக்காக அக்கறை காட்டுபவர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் சுற்றியே என் எண்ணங்கள் இருக்கின்றன''  என்று கூறியுள்ளார். 

TOTAL VIEWS : 1317
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
p9ldt
  PLEASE ENTER CAPTA VALUE.