சிரியானில் தற்கொலைப்படை தாக்குதலில் 23 கிளர்ச்சிப்படையினர் பலி

2017-08-13 13:56:05 | General

அந்த தளத்தின் அருகில், நேற்று முன்தினம் தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தன் உடலில் அணிந்து வந்திருந்த வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட பெல்ட்டினை வெடிக்க செய்தார். அப்போது பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறின.

இந்த தாக்குதலில் கிளர்ச்சிப்படையினர் 23 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 20 பேரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த தகவலை சிரியாவில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைவர் ரமி அப்துல் ரகுமான் வெளியிட்டுள்ளார்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்க வில்லை.

ஆனால் இதற்கு முன்பு கிளர்ச்சிப்படையினர் மீது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர்தான் இத்தகைய தாக்குதல்களை நடத்தி உள்ளனர். எனவே இந்த தாக்குதலையும் அவர்களே நடத்தி இருப்பார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

TOTAL VIEWS : 460
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
et1vu
  PLEASE ENTER CAPTA VALUE.