முகேஷ் அம்பானியின் வீட்டில் தீ விபத்து
2017-07-11 12:07:53 | General

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மும்பை வீட்டில், நேற்று (10) தீவித்து ஏற்பட்டது. 

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, குடும்பத்தினருடன் மும்பை அடுக்குமாடி வீட்டில் வசித்துவருகிறார். 27  மாடிகளைக்கொண்ட இந்தக் கட்டடம், உலகிலேயே விலை உயர்ந்த கட்டடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் தியேட்டர், நீச்சல்குளம், தோட்டம் என அனைத்து வசதிகளும் உள்ளன.

இந்தக் கட்டடத்தின் ஆறாவது மாடியில், தோட்டம் அமைத்துப் பராமரித்துவந்ததாகத் தெரிகிறது. நேற்று இரவு சுமார்  9  மணி அளவில், தோட்டம் இருக்கும் ஆறாவது மாடிப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், ஆறாவது மாடியிலிருந்து கரும்புகை வெளியேறியது. 

தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்பு வாகனங்கள், தீ முழுவதையும் அணைத்துவிட்டனர். இந்தத் தீ விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கட்டடத்தின் சேத விவரம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்த விபத்து தொடர்பாக, மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது.

TOTAL VIEWS : 471
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
eslt5
  PLEASE ENTER CAPTA VALUE.