திருமணமான சில வாரங்களின் பின் மணிக்கட்டை அறுக்க முயன்ற டயானா; புதிய தகவல் அம்பலம்
2017-06-12 16:55:21 | General

திருமணமான சில வாரங்களின் பின்னர் பிரிட்டனின் இளவரசியான டயானா தனது மணிக்கட்டு நரம்புகளை வெட்டுவதற்கு முயற்சித்திருந்ததாக தற்பொழுது வெளியாகியிருக்கும் இரகசியப் பதிவுகள் மூலம் அம்பலமாகியுள்ளது.
1991 இல் இளவரசி டயானாவின் திருமணம் தொடர்பாக ஒரு சிலர் மாத்திரமே உண்மையை அறிந்திருந்தனர்.


அதேநேரம், இளவரசர் சார்ள்ஸ், கமீலா பார்க்கருடனும் தனது உறவினைப் பேணியிருந்தார்.


இவ்வாறான நிலையில் தனது வாழ்க்கை தொடர்பாக வெளிப்படுத்தத் தீர்மானித்திருந்த டயானா, சில விடயங்களைப் பதிவு செய்திருக்கின்றார்.
ஆனால், கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் அந்தப் பதிவுகளின் இரகசியம் பேணப்பட்டுள்ளது.


இந்த இரகசியங்களை அன்ட்ரூ மோட்டன் என்ற பிரபல எழுத்தாளரிடம் டயானா கூறியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


டயானாவின் மரணம் நிகழ்ந்து தற்பொழுது 20 வருடங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், ‘டயானா  அவரது உண்மையான கதை’ என்ற அந்தப் புத்தகம் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த மீள்பிரசுரத்தில் புதிய சில இரகசியங்களும் இணைக்கப்பட்டுள்ளன.


1981 ஜூலை 29 இல் அவர்களின் திருமணம் நடைபெறுவதற்கு இரண்டு தினங்கள் முன்னதாக இவர்கள் இருவருக்கும் இடையிலான தொடர்புகள் ஆரம்பித்திருந்தன. ஆனால், டயானாவும் இளவரசர் சார்ள்ஸும் அந்தச் சந்தர்ப்பத்தில் பிரபலமானவர்களாகவே கருதப்படுகின்றனர். 


இந்தத் தம்பதியினரின் திருமணம் கிட்டத்தட்ட 750 மில்லியன் பேரால் தொலைக்காட்சிகளில் பார்க்கப்பட்டிருந்தது. ‘நான் எனது கணவருடன் மிகவும் நெருக்கமான காதலைக் கொண்டிருந்தேன். அவர்மீது இருந்த எனது கண்களை என்னால் நகர்த்த முடியவில்லை.

இந்த உலகில் மிகவும் அதிர்ஷ்டமான பெண்ணாக என்னைக் கருதியிருந்தேன். அவர் என்னை அன்புடன் நடத்துவார் என்று எதிர்பார்த்தேன். நன்று. ஆனால் இந்த எதிர்வு கூறல் தவறானதா?’ என்று ஒரு சந்தர்ப்பத்தில் டயானா தனது பதிவினை மேற்கொண்டிருந்தார்.


‘புதன்கிழமையன்று நாம் திருமணம் செய்திருந்தோம். அதற்கு முந்திய திங்கட்கிழமை (ஜூலை 27, 1981) இறுதி ஒத்திகைக்காக புனித போல் தேவாலயத்திற்கு நாம் சென்றிருந்தோம். அந்தச் சந்தர்ப்பத்தில் சகல கமெராக்களின் மின் விளக்குகளும் ஒளிர்ந்திருந்தன. அந்தத் திருமண தினம் எவ்வாறு அமையப் போகின்றது என்பதனை நினைத்து நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவளாக காணப்பட்டேன்.’ 


இவ்வாறாக தனது திருமண சுவாரஸ்யங்களை விபரித்திருக்கும் டயானா, ஒரு சந்தர்ப்பத்தில் திருமணமான சில வாரங்களின் பின்னர் தனது மணிக்கட்டுகளை அறுத்துக்கொள்வதற்குத் தீர்மானித்திருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
டெய்லி மெயில்

TOTAL VIEWS : 523
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
b0ndu
  PLEASE ENTER CAPTA VALUE.