அமெரிக்க சீன பேச்சுக்களின் முக்கிய கருப்பொருளான வடகொரியா
2017-03-20 17:38:52 | General

ஏனைய முக்கிய விவகாரங்களை ஒருபுறம் ஒதுக்கி வடகொரியா மீது கூடுதல் கவனம் செலுத்துவதற்காக சீனாவுடன் இணைந்து பணியாற்றும் உடன்படிக்கையொன்றினை அமெரிக்கா கைச்சாத்திட்டுள்ளது. 


அமெரிக்க இராஜாங்க செயலராக பதவியேற்றதன் பின்னர் முதற்தடவையாக ஆசியாவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த ரெக்ஸ் டிலர்ஷன், சீனாவுக்கான விஜயத்தின் போது அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தார். 


சீன ஜனாதிபதி ஜி ஜிங் பிங்கிடமிருந்து வழங்கப்பட்டிருந்த உறுதிமொழிகளுடன் மேக்ஸ் டிலர்ஷனின் சீன விஜயம் நிறைவடைந்திருந்தது. வடகொரியாவின் அணு நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் ஏவுகணை திட்டங்களில் இருந்து சீனா விலகியிருக்க வேண்டுமென்று அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த நிலையில், இந்த விடயத்தினால் சீனா வெறுப்படைந்திருந்தது. 


இவ்வாறான நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் இராஜாங்க செயலராக நியமிக்கப்பட்டிருந்த ரெக்ஸ் டிலர்ஷன் ஆசியாவுக்கான தனது முதல் விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.  சீனாவின் பிராந்திய பாதுகாப்பு விடயங்கள், பூகோளத்தின் விஸ்திரத்தன்மை உள்ளிட்ட பல்வேறு  விடயங்கள் தொடர்பாக பேச்சுக்கள் நடைபெற்றிருந்தன. 


இதேவேளை, தாய்வான் விடயம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையில் பிளவுகள் காணப்பட்டிருந்தன. சுயாட்சியினை கொண்டிருக்கும் தாய்வான் மீது அமெரிக்காவின் பார்வை தொடர்பாக சீனா ஆழமான சந்தேகத்தினை கொண்டிருந்தது. தாய்வான் பிராந்தியம் தமது ஆட்புல எல்லைக்குட்பட்ட பிரதேசமென்று சீனா கூறிவருகின்றது.


இவ்வாறான நிலையில் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகமும் தாய்வானுக்கான பாரிய ஆயுத விற்பனையொன்றினை மேற்கொள்வதற்குத் தயாராகிவரும் நிலையில், இந்த விடயம் சீனாவை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது.


இவ்வாறான பின்னணியில் பீஜிங்கில் மக்கள் மகா மண்டபத்தில் சீன ஜனாதிபதி அமெரிக்க இராஜாங்க செயலர் இடையிலான சந்திப்பு இடம்பெற்றிருந்த போது மேலே கூறப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பாக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

ஆனால், புதிய உறவு யுகத்தில் அமெரிக்காவுக்கும் மிருதுவான ஆட்சி மாற்றமொன்றினை மேற்கொள்வதற்கான முயற்சியினை அமெரிக்க இராஜாங்க செயலர் இந்தப் பேச்சுகளில் வெளிப்படுத்தியிருந்தார் என்று சீன ஜனாதிபதி ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். 


சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான உறவுகள் நட்பு ரீதியாக பேணப்பட வேண்டுமென்று நீங்கள் கூறியிருந்தீர்கள். இதற்காக எனது விருப்பத்தினையும் நான் வெளிப்படுத்துகின்றேன். 

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பல்வேறு தடவைகள் தொலைபேசி உரையாடல்கள், செய்திப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் சீன ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டிருந்தார். 
ராய்ட்டர்ஸ் 

TOTAL VIEWS : 482
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
qzug5
  PLEASE ENTER CAPTA VALUE.