எலிசபெத் மகாராணி உயிரிழந்தால் இப்படித்தான் அறிவிப்பார்கள்; வெளியான இரகசியம்
2017-03-19 09:31:13 | General

பிரித்தானியாவின் எலிசபெத் மகாராணி மரணமடைந்தால் London Bridge is down என அறிவிப்பார்கள் என தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் மகாராணிக்கு தற்போது 90 வயது ஆகிறது, அவர் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.பிற்காலத்தில் அவர் உயிரிழந்தவுடன் வெளியுலகிற்கு அறிவிக்கும் முறைகள் தற்போது தெரியவந்துள்ளது.

அதன்ப்படி, அவர் உயிரிழந்தால் London Bridge is down என்ற வார்த்தை கூறப்படும். இது முதலில் பிரித்தானியாவின் பிரதமரிடம் தான் கூறப்படும்.

இந்த வார்த்தையை கூறினால் மகாராணி இறந்து விட்டார் எனவும் அவர் இறுதி சடங்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அர்த்தமாகும்.

மேலும், மகாராணியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பின்புறம் துக்கத்தை குறிக்கும் கறுப்பு நிறமாக மாற்றப்படும்.

பின்னர், மகாராணி வாழ்ந்து வரும் ஆதஞிடுடிணஞ்டச்ட் அரண்மனை வாயிலில் துக்கத்தை அனுசரிக்கும் உடையுடன் ஒருவர் தொடர்வண்டியை எடுத்து கொண்டு வருவார் என தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் மன்னர் நான்காம் ஜார்ஜ் இறந்து நான்கு மணி நேரம் கழித்தே வெளியுலகுக்கு அறிவித்தார்கள்.

மகாராணி விடயத்தில் இன்னும் அதிக நேரம் கழித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் கூறுகிறது.

TOTAL VIEWS : 863
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
3fekt
  PLEASE ENTER CAPTA VALUE.