திருப்பதி எனும் பிரமாண்டம்; அசரடிக்கும் நேஷனல் ஜியோகிரஃபிக் சேனல்
2017-03-27 12:01:59 | General

உலகம் முழுவதும் உள்ள மக்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் சேனல்களில் முக்கிய இடம் வகிக்கிறது, நேஷனல் ஜியோகிரஃபிக் சேனல். இந்தச் சேனலில், 24 மணி நேரமும் அறிவியல், கலாசாரம், வரலாறு, தொல்பொருள் ஆராய்ச்சி, இயற்கை, வனப்பகுதி, வன விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைப் பற்றி நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டே இருக்கும்.

பள்ளிக்குச் செல்லும் வயது இல்லாத சிறிய குழந்தைகள் முதல் பணியில் இருந்து ஓய்வுபெற்று, கடைசிக் காலத்தை எவ்வாறு மகிழ்வாக அனுபவிக்கலாம் என்று சிந்திக்கும் முதியவர் வரை அனைவரையும் தன் நிகழ்ச்சிகளால் கட்டிப்போட்டிருக்கிறது, இந்த நேஷனல் ஜியோகிரஃபிக் சேனல். 

 இந்த சேனல், 60க்கும் மேற்பட்ட மொழிகளில் ஒளிபரப்பாகிறது. 2011ல் இருந்து தமிழ் மொழியிலும் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த சேனலில், 'வரலாற்றுச் சிறப்பு' பகுதியில் அவ்வப்போது ஆவணப்படம் ஒன்று தயாரித்து வெளியிடப்படும். அந்த வகையில், இந்துக்களின் முக்கிய ஸ்தலமான திருப்பதியைப் பற்றி, 'திருமலா திருப்பதி இன்சைட்' என்ற பெயரில் ஒரு ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளது. 

இந்தப் படத்தில், திருப்பதியில் பக்தர்கள் எப்படிக் குவிகிறார்கள், அந்த பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க என்னென்ன வசதிகள் செய்துதரப்படுகிறது, தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் உண்ண உணவு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது,

தேவஸ்தான நிர்வாகம் எப்படிச் செயல்படுகிறது, திருப்பதி ட்ரேட் மார்க்கான 'லட்டு' எவ்வாறு தயாரிக்கப்படுகிறது, என்னென்ன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள், கோயில் வரலாறு, புராணக்கதைகள், என்னென்ன திருவிழாக்கள் இங்கு பிரசித்திபெற்றது,

அந்த விழாக்களின் போது கோயிலில் என்னென்ன சிறப்பு பூஜைகள் நடக்கும் என, திருப்பதியைப் பற்றிய முழுமையான தகவல் தொகுப்பாக இந்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளனர். 

இந்த ஆவணப் படத்துக்காக, நேஷனல் ஜியோகிரஃபிக் சேனலில் இருந்து ஒரு குழு ஆறு மாதம் திருப்பதியில் தங்கி இருந்து, இந்தப் படத்தை முடித்துள்ளனர். இந்த ஆவணப் படம் உலகம் முழுவதும் இன்று (மார்ச் 27) இரவு 9 மணிக்கு நேஷனல் ஜியோகிரஃபிக் சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது. 

TOTAL VIEWS : 527
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
7thpn
  PLEASE ENTER CAPTA VALUE.