அஞ்சல் தலையில் இடம்பெற்ற திருப்பதி லட்டு
2017-11-07 14:05:58 | General

திருப்பதி லட்டு, ஹைதரபாத் பிரியாணி போன்ற உணவு பொருட்களின் படங்கள் இடம்பெற்ற அஞ்சல் தலைகளை தபால்துறை வெளியிட்டுள்ளது.

இந்திய தபால்துறை மறைந்த தலைவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவர்களின் படங்கள் இடம்பெற்ற அஞ்சல் தலைகளை வெளியிட்டு வருகிறது. அதேபோல், வரலாற்று சின்னங்களின் படங்கள் அடங்கிய தபால் தலைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வகையில் முதன்முறையாக, உலக பிரசித்திபெற்ற திருப்பதி ஏழுமலையான் பிரசாதங்களான, லட்டு மற்றும் பொங்கல் படங்களுடன் கூடிய புதிய தபால் தலைகளை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது.

இதேபோல் ஐதராபாத் பிரியாணி, இட்லி தோசை ஆகிய உணவு வகைகளின் படங்கள் இடம்பெற்ற 5 ரூபாய் அஞ்சல் தலைகளையும் தபால் துறை வெளியிட்டுள்ளது.

TOTAL VIEWS : 146
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
g0fpa
  PLEASE ENTER CAPTA VALUE.