பாகிஸ்தானில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை
2018-01-11 18:48:54 | Leftinraj

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் கசூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி கடந்த வாரம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டது சி.சி.டி.வி கேமரா மூலம் தெரியவந்தது. இந்நிலையில்இ சிறுமியின் உடல் நேற்று முன்தினம் இரவு சாதார் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில்இ சிறுமி கற்பழித்து கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதையடுத்து சிறுமியை கொன்றவர்களை கைது செய்ய வேண்டும் என சிறுமியின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். 

அப்போதுஇ போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. இதில் இபோலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர். அதன்பிறகும் போரட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் கும்பலை நோக்கி சுட்டதில் இதில் இருவர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும்இ விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி ஷாபாஸ் ஷரிப் தெரிவித்தார். 8 வயது சிறுமி கடத்தி கற்பழித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பல அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

TOTAL VIEWS : 132
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
yol6h
  PLEASE ENTER CAPTA VALUE.