’நான் பெண்ணியவாதி அல்ல...' அரங்கையே அதிரவைத்த மிஸ் அமெரிக்காவின் பதில்
2017-05-16 12:22:15 | General

’மிஸ் அமெரிக்கா 2017’ பட்டத்தை 25 வயது விஞ்ஞானி காரா மெக்கல்லோ (Kara McCullough) வென்றுள்ளார்.

‘மிஸ் அமெரிக்கா’ போட்டி நேற்று முன்தினம் அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் நகரில்  நடைபெற்றது. இந்தப் போட்டியில், அமெரிக்காவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

இறுதியில், வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள கொலம்பியாவைச் சேர்ந்த காரா மெக்கல்லோ, மிஸ் அமெரிக்காவாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

காரா, வேதியியல் படிப்பில் பட்டம் பெற்று, அணு விஞ்ஞானியாக (Nதஞிடூஞுச்ணூ ண்ஞிடிஞுணtடிண்t) அமெரிக்க அணு ஒழுங்குமுறை ஆணையத்தில் பணியாற்றிவருகிறார்.

மிஸ் அமெரிக்கா போட்டியில்,  நடுவர்களின் சில கேள்விகளுக்கு காரா அளித்த பதில்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அதுமட்டுமன்றி, இந்தப் போட்டி முழுவதும் தன் சுருள் தலைமுடியை ஸ்ட்ரெயிட்னிங் செய்யாமல் அப்படியே காட்சி அளித்தார். காராவின் அழகான சுருள் கூந்தலுக்கு ஃபேன்ஸ் குவிந்துவிட்டனர்!

'அமெரிக்க  நிறுவனங்கள், பணியாளர்களுக்கு வழங்கும் சுகாதார சேவை சலுகையா அல்லது அவர்களின் அடிப்படை உரிமையா?' என்று காராவிடம் நடுவர் கேள்வி எழுப்பினார். அதற்கு காரா சற்றும் யோசிக்காமல், சுகாதார சேவைகள், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட சேவைகள், பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைதான் என்றார். 'மருத்துவக் காப்பீடு என்பது பணியாளரின் அடிப்படை உரிமை' என்று நெட்டிசன்ஸ் காராவை சாடி வருகின்றனர்.

இதையடுத்து, ’நீங்கள் பெண்ணியவாதியா?’ என்று நடுவர்கள் கேட்டதற்கு, ‘நான் நிச்சயமாக பெண்ணியவாதி கிடையாது. பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்கள். 'ஊஞுட்டிணடிண்t' என்ற வார்த்தையைக் காட்டிலும் 'Equalist' என்று என்னை அடையாளப்படுத்திக்கொள்கிறேன்’ என்றார். காராவின் இந்தப் பதிலுக்கு, அரங்கே அதிரும்படி கைத்தட்டல் எழுந்தது.

TOTAL VIEWS : 566
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
itfg3
  PLEASE ENTER CAPTA VALUE.