ரம்பாவும் கணவரும் நீதிமன்றில் ஆஜர்
2017-03-20 18:07:22 | General

கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை ரம்பா தனது இரண்டு குழந்தைகளுடன்  ஆஜரானார்.


கனடா தொழில் அதிபர் இந்திரன் பத்மநாதன் என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகை ரம்பா திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.


இதனிடையே, கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி ரம்பா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், இரண்டு பெண் குழந்தையுடன் தனியாக வாழ முடியவில்லை. குடும்ப வாழ்க்கையை தற்போது புரிந்துகொண்டுவிட்டேன். கருணை அடிப்படையில் தன் கணவருடன், தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.


இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரம்பா தனது இரண்டு குழந்தைகளுடன் ஆஜரானார். அவரது கணவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

 

TOTAL VIEWS : 874
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
k7orp
  PLEASE ENTER CAPTA VALUE.