ரஜினியை தேர்ந்தெடுத்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது; அமீர்
2018-01-08 11:20:59 | General

சென்னை: ரஜினியை தேர்ந்தெடுத்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து இயக்குனர் அமீர் துவக்கம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். பாஜகவின் தூய்மை இந்தியா திட்டத்தை வரவேற்று முதலில் டுவீட் போட்டவர் ரஜினி தான்.

தமிழகத்தில் எத்தனையோ பிரச்னைகள் வந்த போது அது குறித்து கருத்து தெரிவிக்காமல் பாஜகவின் திட்டங்களை மட்டும் பாராட்டியது ஏன் என்று அமீர் கேள்வி எழுப்பினார். 

இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என கூறிவிட்ட நிலையில் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அமீர் கூறுகையில்,’ மத, இன, பேதமற்ற ஆன்மிக அரசியல் என ரஜினி தெளிவாக தனது ஆன்மிக அரசியலை பற்றி சொல்லிவிட்டார்.

ஆனால் ஏன் அவர் ஏன் அடுத்த நாள் ராமகிருஷ்ணா மடத்திற்கு சென்றார் என கேள்வி எழுகிறது. தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜக ரஜினியை பயன்படுத்துகிறதோ என்ற அச்சம் உள்ளது.

கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாகச் சொன்ன போது ஹரிஹரசர்மா, தமிழிசை எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவதாகச் சொன்னதும் ஆதரவு தெரிவிப்பதால் பாஜகவின் பின்னோட்டம் இருக்கிறது.

ரஜினியை மக்கள் தேர்ந்தெடுத்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. ’ என்றார்.

TOTAL VIEWS : 298
comments
NAME :
YOUR NAME IS REQUIRED.
EMAIL :
YOUR EMAIL ADDRESS IS REQUIRED.
INVALID EMAIL ADDRESS.
NOT FOR PUBLICATION
 
ADD YOUR COMMENT.
  ENTER THE TEXT HAS SHOWN
uz3gs
  PLEASE ENTER CAPTA VALUE.